Skip to main content

ஆயுஸ் படிப்புகளுக்கு நீட் உண்டா ? அலட்சியத்தில் எடப்பாடி அரசு ! பரிதவிக்கும் மாணவர்கள் !  

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெளியிட்ட தங்களது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இவை சாத்தியமில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது. சாத்தியமா? சாத்தியமில்லையா? என்கிற விவாதங்கள் நடக்கும் நிலையில், ’’ இந்தாண்டு எங்களுக்கு நீட் இருக்கிறதா? இல்லையா ? என்பதை தெளிவுபடுத்தாமல் அலட்சியமாக இருக்கிறது எடப்பாடி அரசு‘’ என பரிதவிக்கிறார்கள் இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேரத் துடிக்கும் மாணவர்கள்.
 

neet exam

பொது மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக அத்தேர்வினை அமல்படுத்தப்படுவதால் ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். அத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான பயிற்சி (கோச்சிங்) மையத்தில் சேர்ந்து படித்து அதன்பிறகு நீட் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக, ஒவ்வொரு கோச்சிங் செண்டரும் 1 லட்சம், 2 லட்சம் என பணம் வசூலிக்கின்றனர். இதனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே தனியார் கோச்சிங் செண்டருக்கு போக முடிகிறது.
 

neet exam

இந்த நிலையில், பொது மருத்துவம், பல் மருத்துவம் தவிர்த்து சித்தா, யூனானி உள்ளிட்ட ஆயுஸ் படிப்புகளுக்கு ( இந்திய மருத்துவ முறை படிப்புகள் ) கடந்த வருடம் நீட் தேர்வு இல்லை என எடப்பாடி அரசு அறிவித்திருந்தது. ப்ளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆயுஸ் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். ப்ளஸ் 2 தேர்வு துவங்குவதற்கு முன்பே இதற்கான அறிவிப்பை எடப்பாடி அரசு வெளியிட்டதால் ஆயுஸ் படிப்புகளில் சேர விரும்பிய மாணவர்கள் எவ்வித மன அழுத்தங்களும் இல்லாமல் ப்ளஸ் 2 தேர்வை எழுதினார்கள்.
 

neet exam

ஆனால், இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்வு முடிந்த நிலையிலும் ஆயுஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா ? இல்லையா ? என்பதை எடப்பாடி அரசு தெளிவுபடுத்தவில்லை. இது குறித்து பல கடிதங்கள் முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இது குறித்து அக்கறை காட்டவில்லை ஆட்சியாளர்கள். இதனால், ஆயுஸ் படிப்புகளை விரும்பும் மாணவர்கள் மன உளைச்சல்களில் தவித்தபடி இருக்கின்றனர்.
 

இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர் அமைப்புகள், ‘’ ஆயுஸ் படிப்புகளுக்கு கடந்த வருடத்தைப் போலவே நீட் தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும் என்பதுதான் இப்படிப்பில் சேரத் துடிக்கும் 2 லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு. இது ஒரு புறம் இருந்தாலும்,  இப்படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா? இல்லையா ? என அறிவிக்க வேண்டிய அரசாங்கம், அது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் கவலையாக இருக்கிறது. நீட் தேர்வு இருக்கிறது என அறிவித்துவிட்டால், அதனை எதிர்கொள்வதற்கான மன நிலையை மாணவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். இல்லை என சொல்லிவிட்டால் அதற்கேற்ற மனநிலையில் இருப்பார்கள். ஆனால், இவ்விசயத்தில் அரசாங்கம் தெளிவுப்படுத்தாததால், இந்த வருடம் நீட் தேர்வு இருப்பதாக பணம் பறிக்கத் துடிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் செய்தியை பரப்பி வருவதால் மாணவர்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
 

நீட் தேர்வு இருக்கிறது என அரசாங்கம் சொல்லிவிட்டால், பணம் கொடுத்து கோச்சிங் செல்பவர்கள் செல்லட்டும். அதேசமயம், கோச்சிங் செண்டரில் சேர்ந்த பிறகு, நீட் தேர்வு இல்லை என அரசாங்கம் அறிவித்தால் கட்டிய பணத்தை கோச்சிங் செண்டர்களை நடத்துபவர்கள் திருப்பித் தருவார்களா? மாட்டார்கள். அதனால்தான் நீட் தேர்வு உண்டா ? இல்லையா? என அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோச்சிங் செண்டர்களில் பணம் கட்டி மாணவர்கள் ஏமாந்துப் போகாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அப்படியிருந்தும் அலட்சியமாக இருக்கிறது எடப்பாடி அரசு. தேர்தலில் காட்டும் அக்கறையை மாணவர்களின் தேர்வு விசயத்திலும் ஆளும்கட்சியினர் காட்ட வேண்டாமா? இந்த லட்சணத்தில், எங்களுக்கு ஓட்டு போட்டால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கை வாசிக்கிறார்கள் ‘’ என கொந்தளிக்கின்றன மாணவர் அமைப்புகள்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.