/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2_36.jpg)
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி வீடுபுகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தாக்கப்பட்ட மாணவனின்படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் சார்பில் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''முதல்வர் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு விரைந்து சிலையை நிறுவ வேண்டும் என்று மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். பள்ளி மாணவர்களிடையே சாதி, மதம் தொடர்பான நச்சு அரசியல் பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் இது வலதுசாரி அமைப்புகளால் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. சாதிவெறி மற்றும் மதவெறி அரசியலை பரப்பக்கூடிய சமூக விரோத சக்திகளை கண்காணிக்க தனி உளவுப்படை தேவைப்படுகிறது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)