தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. கிட்டதட்ட 73 சதவீத வாக்குகள் பதிவானது. கரோனா காரணமாக ஒரு வாக்குச் சாவடியில் 1000க்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக 88 ஆயிரம் வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் அமைத்திருந்தது.
இந்நிலையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வாக்கு எண்ணிக்கையின்போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், இதன் காரணமாக அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வர சற்று கால அவகாசம் ஆகும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.