தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட வாக்கு போடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் எதற்கு என்று தெரியாமல் எதிர்க்கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/23GFHGFG.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
மறு வாக்குப்பதிவுக்கு தயாராகும் வகையிலேயே தேனி மற்றும் ஈரோட்டுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்
13 மாவட்டங்களில்46 வாக்கு மையங்களில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை தவறு நடந்திருக்கிறது. இதுபற்றி உடனே தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குபதிவு நடைபெறுமா என்பது பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். இதுபற்றி அரசியல் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)