Published on 11/05/2018 | Edited on 20/07/2018
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பதட்டமும் பயமும் இருப்பதாகவும், இதன் காரணமாகவே அவர்கள் குழந்தை கடத்தல்கார்கள் என நினைத்து தாக்குதல் நடத்துவதாகவும் மாநிலங்கவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று மக்கள் மத்தியில் பதட்டமும், பயமும் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக நடவடிக்கை எடுக்க கூடிய அளவில் மக்கள் இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரிசெய்யப்பட்டால் மட்டும் தான் பதட்டம் மக்கள் மனதில் இருந்து நீக்கப்படும். எல்லோரையும் அவநம்பிக்கையாக பார்க்கப்படும் சூழல் மாற வேண்டும். இவ்வாறு கூறினார்.