Is there a connection between the Chennai robbery and the T. Malai robbery? - Police intensive investigation

சென்னை பெரம்பூரில் உள்ள ஜூவல்லரி ஒன்றில் வெல்டிங் மூலம் ஷட்டர் லாக்கர் துளையிடப்பட்டு 9 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்தநிலையில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை கொள்ளைக்கும் திருவண்ணாமலை கொள்ளைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. ஓசூர் பகுதி, அதேபோல் கும்பகோணம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். கொள்ளை போன ஏடிஎம்களில் வாட்ச்மேன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.