வடகிழக்கு பருவமழை தொடர்பாகதென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும். இதில், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (21/11/2022) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை (22/11/2022) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக- புதுவை கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்லக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.