Published on 21/11/2022 | Edited on 21/11/2022

வடகிழக்கு பருவமழை தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும். இதில், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (21/11/2022) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை (22/11/2022) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக- புதுவை கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்லக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.