''நீட் பயற்சி தரும் அளவிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை'' - அமைச்சர் செங்கோட்டையன்

'' There are not enough government school teachers to train for the NEET exam '' - Minister Senkottayan

6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு தற்போது வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (11.02.2021) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்இன்று செய்தியாளர்களைச் சந்தித்தஅவர், ''12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். மத்திய அரசின் நீட், ஜெஇஇதேர்வுகளுக்குப் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை.அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது.நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். கல்விடிவி மூலம் பயின்ற மாணவர்களின் கல்வித் தரம் பற்றி ஆராய திறனாய்வு தேர்வு பணி நடக்கிறது''என்றார்.

govt school neet sengottaiyan TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe