Advertisment

"துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி! 

publive-image

தஞ்சை மாவட்டம், களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். அத்துடன், நிவாரணத் தொகையையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து, படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சப்பரம் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது துயரத்தைத் தந்திருக்கிறது. தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. திருவிழாவில் 11 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தகவலை அறிந்து துடிதுடித்துப் போனேன். அரசு அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisment

11 பேர் குடும்பங்களில் துயரத்தில் மண்ணின் மைந்தன் என்ற முறையில் நானும் பங்கெடுக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதலைத் தெரிவித்திருக்கிறேன். சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சைத் தருவதற்கு உத்தரவிட்டிருக்கிறேன். வருவாய்துறை முதன்மைச் செயலாளர் ஜெயந்த் குமார் தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். தூற்றுவோர் பற்றி நான் கவலைப்படுதில்லை, மக்களோடு மக்களாக இருப்பவன் நான்" எனத் தெரிவித்தார்.

pressmeet Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe