Advertisment

''தமிழகத்தில் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை'' - செங்கோட்டையன் பேட்டி

 '' There are no Urdu trained teachers in Tamil Nadu '' - Senkottayan interview

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று (16.02.2021) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பதுபற்றி இப்போது கூற இயலாது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் டி.ஆர்.பிதேர்வு எழுதவாய்ப்பு வழங்குவது குறித்துஆலோசிக்கிறோம். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவை,” என்றார்.

Advertisment

கடந்த 12 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ''மத்திய அரசின் நீட், ஜெஇஇதேர்வுகளுக்குப் பயிற்சி தரும் அளவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லை. அதனால்தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது'' எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

teachers sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe