வாக்கு எண்ணிக்கையில் 15,904 ஊழியர்கள்...100 மீட்டருக்கு வெளியில் சென்றால் முகவர்களுக்கு மீண்டும் அனுமதியில்லை

நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால்அனைத்து வாக்கு எண்ணும்மையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மக்களவைத் தொகுதி தவிர நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 There are 15,904 employees on the counting ... 100 meters away, the agents are not allowed again

அதேபோல்தமிழகத்தில் 45 மையங்களில் காலை 8 மணிக்குவாக்கு எண்ணிக்கைநடைபெறுகிறது. 39 மக்களவை தேர்தல் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 11,659 ஊழியர்கள் 4,245 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 15,904 பேர் மின்னணு வாக்குகளை எண்ண உள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகளில் எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு முகவர், இரண்டு கூடுதல் முகவர் என ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள்அனுமதிக்கப்படுவர். முகவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு மேல் வெளியில் சென்றால் மீண்டும் அனுமதி இல்லை.

election commission
இதையும் படியுங்கள்
Subscribe