style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மத்திய அரசு விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 50 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. நெல், சோளம், கம்பு, சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
டீசல் விலை உயர்வை அரசு நிர்ணயம் செய்வதில்லை, தனி அமைப்பே செய்கிறது. எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக தூத்துக்குடி மக்களே சொல்லி வரும் நிலையில், பயங்கரவாத்தை அடக்க காவல் துறை, அரசு செயல்பட வேண்டும். ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செயல்பாடு குறித்து ஊகத்தின் அடிப்படையில் தான் சொன்னேன் என அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)