ராமலிங்கம் கொலைவழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையில் தென்காசி வாலிபர்!

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தென்காசியில் இஸ்லாமிய வாலிபர் ஒருவரை புலனாய்வுத் துறை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ramalingam

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் பா.ம.க. முன்னாள் செயலாளரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு என்.ஐ.ஏ. மாற்றப்பட்டது.

இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி மைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஜல்லி மைதீன் என்ற அகமது சாலிக் (51) என்பவரை தேசிய புலனாய்வு துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

pmk police Ramalingam
இதையும் படியுங்கள்
Subscribe