Advertisment

நிலத்தகராறில் அரிவாள் வெட்டு!

thenkasi incident police investigation

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் அருகில் உள்ள இடைகாலை சேர்ந்தவர் பண்டாரம், சலவைத் தொழிலாளி. அவர்களுக்குசொந்தமான இடத்தில் பண்டாரம் சலவை செய்ததை தேய்க்கும் குடிசை போட்டிருக்கிறார். அதன் பக்கத்திலிருக்கும் ராஜ் என்பவர் அதனை ஆக்கிரமிக்கும் நோக்கில் பண்டாரத்திடம் தகராறு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து பண்டாரத்தின் மகன் நாகராஜ் சொல்லும் போது, “நேற்று முன்தினம் மதியம் என் தந்தையிடம் தகராறு பண்ணிய ராஜ், அரிவாளைக் கொண்டு வெட்டவந்தார். உடன் அவரது மகன் துரையும் விரட்டினார். என் தந்தை பதறி ஓடியவர் தவறி கீழே விழுந்ததும் ராஜ் அரிவாளைக் கொண்டு கையில் வெட்டியவர் வயிற்றில் மிதித்துவிட்டு ஓடிவிட்டார். பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர்கள் தப்பிவிட்டார்கள்.

Advertisment

உடனடியாக என் தந்தையை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு இலத்தூர் காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார் செய்துள்ளேன். சம்பவத்தை எனது செல்லில் படமெடுத்தேன்.” என்றார் நாகராஜ்.

Tenkasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe