Advertisment

சிறுமி பாலியல் வழக்கு: இரண்டு பேருக்கு பத்தாண்டுகள் சிறை!

பதிமூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

theni women court verdict

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார் அதே கம்பம் சங்கிலிபாண்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன், பாரதி இருவரும் வசித்துவந்தனர். இதில் ஈஸ்வரன் சிறுமியிடம் அடிக்கடி பரிசு பொருள் வாங்கி கொடுத்து காதலிப்பதாக கூறி பழகி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள அவனது வேறொரு நண்பர் வீட்டுக்கு சிறுமியை ஈஸ்வரன் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதனை பாரதி வீடியோவாக பதிவு செய்த நிலையில், மயக்கம் தெளிந்து அழுத சிறுமியிடம் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர்.

வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி இருவரும் மூன்று மாதங்களாக தொடர்ந்து அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளனர். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் ஈஸ்வரன், அவனுடைய நண்பன் பாரதி மீது புகாரளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2015 அக்டோபர் 12 ம்தேதி இருவரையும் கைதுசெய்தனர்.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தீபா இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ஈஸ்வரனுக்கு ரூபாய் பத்தாயிரமும், பாரதிக்கு ரூ.20 ஆயிரமும் அபதாரமாக விதித்து உத்தரவிரட்டுள்ளார்.

Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe