தேனி ஆயுதப்படை – 2011 பேட்ஜ் காவலர் ராஜ்குமார், குடும்ப சூழ்நிலை காரணமாக சில தினங்களுக்கு முன் தீக்குளித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை, மதுரையிலுள்ள கென்னட் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
இறந்துபோன ராஜ்குமாருக்கு, தேவி என்ற மனைவியும், ரிஷி, தர்ஷன், வெற்றி ஆகிய மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர்.