தனிமைப்படுத்தப்பட்டவர் மன உளைச்சலால் கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே ஜம்மகநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 34 வயதான இளைஞர் இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்துக்காகச் சென்றார். பின்பு அந்த இளைஞர் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பினார். இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக இளைஞரை அவரது வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

Advertisment

theni person coronavirus government hospital

ஒரு வாரமாக தனிமையிலிருந்தவர் மனஉளைச்சலால் நேற்று ஆடைகளை களைந்து வெளியே ஓடி வந்துள்ளார். வெளியே ஓடி வந்த போது நாச்சியம்மாள் என்ற 90 வயதான மூதாட்டியைத் தொண்டையில் கடித்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

படுகாயமடைந்த மூதாட்டி தேனி அரசு மருத்துவக்க்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏற்கனவே குடும்பத்தினர் தனிமைப்படுத்தியதால் புதுக்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் நேற்று (27/03/2020) தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.