Skip to main content

தேமுதிகவினரை  இழுத்த அமமுக  வேட்பாளர்!

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயில்வேலும்  திமுக சார்பில் சரவணக்குமாரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கதிர்காமும் மீண்டும் களத்தில் போட்டியிடுகிறார்கள்.

 

kk

 

இந்த மூன்று அரசியல் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.  இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமு மீது ஓபிஎஸ் தரப்பில் தூண்டுதலின் பெயரில் பாலியல் புகார் கூறி ஒரு வீடியோவையும் வெளியிட வைத்து அதன் பேரில் போலீஸார் வழக்குப் போட்டனர். அதை கண்டு கதிர்காமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள்  மற்றும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

 

kk

 

இதனால் மனம் நொந்து போன கதிர்காமம் பிரச்சாரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி போய் விட்டார். அதன்பின் மதுரை ஐகோர்ட் கிளையில் கதிர்காமு முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியதால் மீண்டும் கதிர்காமு தேர்தல் களத்தில் குதித்து என் வெற்றியை சீர்குலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு ஒரு பொய்யான தகவல்களை என் மீது பரப்பி வருகிறார்கள் என்று கூறி வாக்காள மக்களிடம் பரிசு பெட்டிக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.  

 

kk

 

 இந்த நிலையில்தான் பாமகவில் இருந்த  நடிகர் ரஞ்சித் பாமகவில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்ததின்  பெயரில் கதிர்காமுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் பிரச்சாரம் செய்ய வந்தார்.  அப்பொழுது பெரியகுளத்தில் உள்ள  தேமுதிகவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தேமுதிகவிலிருந்து விலகி உறுப்பினர் கார்டுகளை தூக்கி எறிந்து விட்டு  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரான கதிர்காமு முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

 

kk


   அப்போது பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கதிர்காமோ..... இந்த தேர்தலில் நான் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் நீங்கள் முழு ஆதரவு தந்து பரிசுபெட்டிக்கு முழுஆதரவு பெற்று தர வேண்டும் என்று கூறினார்.  இந்த கூட்டத்தில் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்