Advertisment

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் மனு தள்ளுபடி!

theni mp raveendranathkumar chennai high court

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisment

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர்தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலைத் தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என, ரவீந்திரநாத் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி விட முடியாது எனக் கூறி, ரவீந்திரநாத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால், தேர்தல் வழக்கை அ.தி.மு.க. எம்.பிதொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ops son P Raveendranath Kumar Theni chennai high court
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe