Skip to main content

காங்கிரஸ் மாநாட்டுக்கு டிராக்டர்கள் கொண்டுவர தடை... மீறி போராட்டம் நடத்துவோம்- கே.எஸ்.அழகிரி அதிரடி!

Published on 18/10/2020 | Edited on 19/10/2020
congress

 

மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மாநாட்டை தேனி - போடி சாலையில் நாளை திங்கட்கிழமை போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

இந்த மாநாட்டில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி மற்றும் , சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட் டிற்காக டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் அனுமதியோடு செய்வதற்கான முயற்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மௌலானா மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.முருகேசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நடைபெறவுள்ள மாநாட்டை முடக்குகிற வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அதிகாரி சாய்சரண் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தரமுடியாது, டிராக்டர்கள் பங்கேற்க கூடாது என்று விவசாயிகளை காவல்துறையின் மூலம் மிரட்டி அச்சுறுத்துகிறார். இவரது அராஜக போக்கு காரணமாக பதற்ற மான சூழல் உருவாகியுள்ளது.

இது சம்பந்தமாக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அதிமுக நிறுவிய 49 ஆம் ஆண்டு விழாவையொட்டி  தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் நூற்றுக்கணக்கான கார்களுடன் அணி வகுத்து பயணம் மேற்கொண்டதை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதுபோல் பல்வேறு பொது இடங்களில் அ.தி.மு.க. கொடி ஏற்றவும், டிஜிட்டல் பேனர்கள் வைக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறார். இவற்றையெல்லாம் தடுக்காத மாவட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்கிற கூட்டத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி நடத்தவிடாமல் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எஸ்.பி. சாய்சரண்  தனது பாரபட்ச போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வுக்கு எப்படி விழா கொண்டாட அனுமதி அளித்தாரோ, அதேபோல விவசாயிகள் கூட்டம் நடத்துவதற்கு தமிழ் நாடு இளைஞர் காங்கிரசுக்கு அவர் அனுமதி அளிக்க வேண்டும் அப்படி அனுமதி அளிக்க தவறினால் தடையை மீறி விவசாயிகள் கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை எச்சரித்து கண்டன அறிக்கை விட்டு இருக்கிறார்.  இது தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.