Skip to main content

மூன்று மகள்களுடன் விஷம் குடித்த தாய் பலி!!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

போடி பகுதியில் மூன்று மகள்களுடன் விஷம் குடித்ததில் இரு மகள்கள் பலியானதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் பலியானார்.

போடி காந்தி நகரில் வசித்து வந்த பால்பாண்டி தம்பதிக்கு லட்சுமிக்கு அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா என்ற மூன்று  பெண்கள், இவர்கள் சென்னையில் அரிசி வியாபாரம் செய்து வந்தனர். அந்த அரிசி வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில வருங்களுக்கு முன்பு சொந்த ஊரான போடிக்கு வந்தனர்.

theni incident


இந்த நிலையில் தான்  திடீரென பால்பாண்டிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து லட்சுமி தன் மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற தையல் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் மேலும் தையல் வேலையில் போதுமான வருமானம் கிடைக்காததால் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்தனர். இருந்தாலும் தன் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. எப்படி மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற போறேனோ என்ற மன வருத்தம் தொடர்ந்து லட்சுமி மனதில் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 3-ம் தேதி அதிகாலையில் டீ வாங்கிட்டு வந்த லட்சுமி அந்த டீயில் விஷத்தை கலந்து மூன்று  மூன்று பெண் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து விட்டார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தில் தெரியவே உடனடியாக லட்சுமி, அனுசியா, ஐஸ்வர்யா, அட்சயா ஆகிய நான்கு பேரையும் போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனுசியா ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. அதை தொடர்ந்து லட்சுமியையும் மூன்றாவது மகள் அட்சயாவையும் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.


இந்த நிலையில் தான் நேற்று லட்சுமியின் உடல் நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாததால் திடீரென  இறந்துவிட்டார். இப்படி ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இறந்ததைக் கண்டு போடி பகுதி சோகத்தில் மூழ்கியது. அதுபோல் தனது தாய் லட்சுமியும் உடன் பிறந்த சகோதரிகள் அனுசியா, ஐஸ்வர்யா என குடும்பத்தில் உள்ள மூன்று பேருமே இறந்ததை கண்டு அட்சயா தனிமையாக்கப்பட்டு இருப்பதை கண்டு பொதுமக்களும் மனம் வாடினர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார். 

Next Story

'மூனு வருஷம் வெட்டியா போச்சு... உழைக்கலன்னா அவ்ளோதான்' - ஆதங்கப்பட்ட தங்க தமிழ்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தத் தேர்தலில், தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், பாஜக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் களத்தில் உள்ளனர். டி.டி.வி. தினகரனும், தற்போது திமுகவில் உள்ள தங்க தமிழ்செல்வனும் ஒரே கட்சியில் பயணித்த முன்னாள் நண்பர்கள் என்பதால் தேனி தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்த களமாக உள்ளது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், “மூன்று முறை தோற்றதற்கு வஞ்சம் தீர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து உழைச்சு அதிகமான ஓட்டை வாங்குங்க. உழைத்தால் கட்சியில் இருங்க இல்லை என்றால் வெளியே போய்விடுங்க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்காமல் இருந்திருந்தால் அமைச்சராக கூட ஆகியிருக்கலாம். மூன்று ஆண்டுகள் வெட்டியாய் போய்விட்டது'' என ஆதங்கமாகப் பேசினார்.