Advertisment

தரையில் கிடக்கும் பிரேதங்கள்! தேனி அரசு மருத்துவமனையின் அவலநிலை!!

theni Government hospital

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் உதவியுடன் அவரது சகோதரர் தேடிப்பிடித்து எடுத்துச் சென்றார். பிணவறையில் தரையில் உடல்களைப் போட்டிருந்தனர் இந்த விவகாரத்தில் பணியாளர்கள் இருவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

பெரியகுளம் அருகே நல்லகருப்பன் பட்டியைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி. திருப்பூர் பின்னலாடை நிறுவன ஊழியரான இவர், பெரியகுளத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தார். நேற்று முன்தினம் (31.05.2021) உடல்நிலை பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் சென்றார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தது.

Advertisment

கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்று காலை அவரது உடலை வாங்க அவரது சகோதரர் வெங்கடேஷ், கரோனா பினவறைக்குச் சென்றார். வாட்ச்மேன் மற்றும் ஒரு பணியாளர் மட்டுமே இருந்தனர். தண்டபாணி பிரேத உடலை வழங்குமாறு கேட்டதற்கு, நீங்களே அடையாளம் கண்டு எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினர். உடனே உள்ளே சென்றபோது 2 மேடைகளில் மூன்று உடல்களும், கீழே தரையில் மூன்று உடல்களும் தனித்தனியாக 10 உடல்களும் அருகே இருந்தன.

இதையடுத்து உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியுடன் பாலதண்டாயுதபாணி உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கில் சடங்குடன் தகனம் செய்தனர். இந்த நிலையில், பாலதண்டயுதபாணிக்கு கரோனா தொற்று உறுதியான தகவல் குடும்பத்தினருக்கு கிடைக்காததால் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Government Hospital Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe