Skip to main content

எரிவாயு தகன மேடை இருந்தும் உடல்களை வெளியே எரிக்கும் மக்கள்: தேனியில் அவலநிலை!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

 

தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் நகராட்சி சார்பில் கடந்த 2013 ம் ஆண்டில் தேனி அல்லிநகரம் நகர் மன்ற தலைவராக இருந்த முருகேசன் தலைமையிலான கவுன்சிலர்கள் இருந்த போது தான் பழைய பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள பள்ளிவாசல் சந்து கடைசியில் நகராட்சி சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

 

theni



         
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருக்க கூடிய மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மின் மயானம் செயல்பட்டு வருகிறது. ஆனால்  துணை முதல்வர் ஒபிஎஸ் சின் சொந்த மாவட்டமான தேனியில் எரிவாயு தகனமேடை கடந்த ஆறு வருடங்களாக செயல் பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த எரிவாயு தகன மேடை செயல்படுவதில்லை.


    
இதுசம்பந்தமாக ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது "எரிவாயு தகன மேடையில் உள்ள புகை போகும் குழாய் கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு உடைந்து கீழே விழுந்து விட்டது அதை சரி செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் எரிவாயு தகன  மேடை செயல்படுவதில்லை. அதனால்  தான் இறந்தவர்களின் உடலை எரிவாயு தகன மேடையில் வைத்து எரிக்க முடிவதில்லை. தினசரி 10க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் இந்த எரிவாயு தகன மேடைக்கு வருவதால் அதை வெளிப்புறத்தில் உள்ள  பழைய ஷெட்டில் வைத்து விறகுகளை அடுக்கி உடல்களை  எரிக்கிறோம், சில நேரங்களில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு உடல்கள் வந்தால் ஷெட்டில் வைத்து எரிக்க இடம் இருக்காது . அதுனால ஷெட்டுக்கு வெளியே போட்டும் உடல்களை  சில நேரங்களில்  எரிப்போம்.அப்போது மழை பெய்துவிட்டால் பெரும் கஷ்டமாகிவிடுகிறது உடல்களும் சரிவர எரியாமல் போய் விடுகிறது. அதை கண்டு உறவினர்களும் சத்தம் போடுகிறார்கள். 

 

அப்படி இருந்தும் கூட  உடைந்து போன புகை குழாய்யை சரி செய்யவும் மீண்டும் தகனமேடையை செயல்படுத்தவும் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தொகுதி திமுக எம்எல்ஏவான சரவணகுமார் தான் தொடர்ந்து அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறார்" என்று வருத்தத்துடன் கூறினார்கள்.
   

இது சம்பந்தமாக பள்ளிவாசல் தெரு பகுதி மக்கள் சிலரிடம் கேட்டபோது, "புகை கூண்டு  இருந்தால்  எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தற்பொழுது எரிவாயு தகன மேடையில்  இறந்தவர்களின் உடல்களை  வைத்து எரிக்காமல் வெளியே வைத்து எரிக்கிறார்கள். அதனால் புகை முழுவதும் தெருக்களில்  பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதைப்பற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும் கூட கண்டுகொள்வதில்லை அதனால் காலையிலிருந்து இரவு வரை இறந்தவர்களின்  புகையைதான் சுவாசித்து வருகிறோம்" என்று கூறினார்கள்.

 

theni



  
இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விளக்கம் கேட்க பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும்கூட லைனில் பிடிக்க முடியவில்லை. ஆக துணை முதல்வராக ஒபிஎஸ்சும், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாக இருந்தும் கூட சொந்த மாவட்டத்தின் தலைநகரான தேனியில் உள்ள எரிவாயு தகன மேடையை சரி செய்ய ஆர்வம் காட்டவில்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.