திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், நகர பொறுப்பாளர் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய பொறுப்பாளர் போன்ற பதவிகளைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக பொறுப்புக் குழு தலைவர் என்ற பதவியையும் அறிவாலயம் அறிவித்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தேனி மாவட்டத்திலும் பொறுப்புக் குழு தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர்களை அறிவாலயம் அதிரடியாக அறிவித்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் எட்டு ஒன்றியம், நான்கு நகரங்கள் இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தேனி ஒன்றிய செயலாளரான ரத்தினசபாபதி, சின்னமனூர் ஒன்றிய செயலாளரான முருகேசன், உத்தமபாளையம் ஒன்றிய செயலாளரான குமரன், பெரியகுளம் நகர செயலாளரான அபுதாகீர், கம்பம் நகர செயலாளரான சிங் செல்லப் பாண்டி ஆகியோர்களின் பதவிகளை திடீரென அறிவாலயம் எடுத்து விட்டு அதற்கு பதிலாக தேனி ஒன்றிய பொறுப்பாளராக சக்கரவர்த்தி, சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளராக அண்ணா துறை உத்தமபாளையம் ஒன்றிய பொறுப்பாளராக அணைபட்டி முருகேசன், பெரியகுளம் நகர பொறுப்பாளராக முரளி, கம்பம் நகர பொறுப்பாளராக நெப்போலியன் ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக அறிவாலயம் அறிவித்தது.
ஆனால் பதவி பறிக்கப்பட்ட மூன்று ஒன்றிய செயலாளர்களும் இரண்டு நகர செயலாளர்களும் நாங்கள் என்ன தவறு செய்தோம் எதற்காக எங்கள் பதவியை எடுத்தீர்கள் என்று தொடர்ந்து அறிவாலயத்தில் முறையிட்டதுடன் மட்டுமல்லாமல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து எங்க மேல் எந்த தவறும் இல்லை வேண்டுமென்றே பதவிநீக்கம் செய்து விட்டனர் என்றும் முறையிட்டனர். அதன் அடிப்படையில்தான் கடந்த 19ம் தேதி முரசொலியில் பொதுச் செயலாளர் அன்பழகன் உத்திரவின்பேரில் மூன்று ஒன்றியம் இரண்டு நகரம் பொறுப்புக்களையும் கலைத்துவிட்டு புதிய பொறுப்புக்குழுவை அறிவித்தார். அதில் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேரையும் அந்தந்த ஒன்றியம் மற்றும் நகர பகுதிக்கு பொறுப்புக் குழு தலைவராகவும் ஏற்கனவே அந்தப் பகுதியில் பொறுப்பாளராக இருந்தவர்களுக்கு பொறுப்பாளர்கள் பதவியையும் கொடுத்தனர்.
அதுபோல் பொறுப்புக் குழு உறுப்பினர்களையும் புதிதாக அறிவாலயம் அறிவித்தது அதைக்கண்டு பொறுப்புக் குழு தலைவர்களும். பொறுப்பாளர்களும் பூரித்து போய்விட்டனர். அதோடு மூன்று ஒன்றியங்கள் மற்றும் இரண்டு நகரங்களில் உள்ள பொறுப்புக் குழு தலைவர்களும் பொறுப்பாளர்களும் இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என தலைவர் ஸ்டாலினும் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கட்சியை வளர்க்கும் ஆர்வத்தில் பொறுப்புக் குழு தலைவர்களும் பொறுப்பாளர்களும் களம் இறங்கி வருகிறார்கள்.