ADVERTISEMENT

’ரஜினிகாந்துக்கு அங்கு அதிகமான அனுபவம் உள்ளதால் அவரையும் மோடி அழைத்துச்சென்றிருக்கலாம்...’ஈவிகேஎஸ் பேட்டி!

06:32 PM May 19, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலசுந்தரம், வடுகபட்டி ஆகிய இடங்களில் மறு வாக்கு பதிவு நடைபெற்று . இந்த நிலையில் தான் பெரியகுளம் வடுகபட்டி 197- வது வார்டு சாவடியைப் பார்வையிட்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தேனி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ‘’இந்த இரண்டு தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரி நாங்களோ பிறகட்சிகளோ, ஏன் மாவட்டத் தேர்தல் அதிகாரி கூட கேட்கவில்லை.

ADVERTISEMENT

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சரவணக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுயில் மகராஜனும், தேனி பாராளுமன்ற வேட்பாளராகிய நானும் வெற்றி பெறுவோம். ஆனால் அதிமுகவின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருக்கிறது. இரண்டு இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற கோயமுத்தூர் மற்றும் சென்னை போன்ற இடங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் மர்மமாக உள்ளது. அவர்களின் தலைவியின் மரணம் மர்மமாக உள்ளது. இவர்கள் சுடுகாட்டில் போய் தியானம் செய்து கிளிசோசியம் பார்த்தும் அரசியல் நடத்துபவர்கள்.


ஆகவே, இந்தப் போக்கு வருகின்ற 23ம் தேதிக்குப் பிறகு மத்தியில் ராகுல் காந்தியின் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவிக்கு வரும் போது இப்போது அயோக்கியத்தனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


மூன்றாவது அணியுடன் கூட்டணி வைக்கப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறுகிறார்களே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, மோடி தோற்கடிக்கப் பட வேண்டும். மேலும், காங்கிரஸ் மட்டுமல்லாது மம்தா பானர்ஜி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே அத்தனை பேரும் ஒன்றாக இருக்கிறோம். தேர்தல் முடிந்த பிறகு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று தான் அதற்கு முன்பாகவே இமயமலை சென்றிருக்கிறார். இமயமலை சென்றவர் கூடவே ரஜினிகாந்தையும் அழைத்துச் சென்றிருக்கலாம். ஏனென்றால் அவருக்கு அங்கு அதிகமான அனுபவம் உள்ளது. மோடி இமய மலையிலேயே செட்டிலாகி விடுவார்’’என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT