Advertisment

தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி- அதிமுக வெற்றி!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், ஒன்றிய குழுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் 27 மாவட்டங்களில் இன்று (11.01.2020) நடைபெற்று வருகின்றது.

Advertisment

 Theni District Panchayath President ADMK WINNING

அதன்படி 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர்; 9,624 ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும்தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கிறது. அதேபோல் ஒன்றிய குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இதனிடையே தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

AIADMK PARTY indirect election Theni winning
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe