Advertisment

ஓபிஎஸ் மகனுக்கு கல்வெட்டு வைத்த ஜெ.  விசுவாசி கைது!

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்குமுன்பே துணை முதல்வர் ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத்குமார் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என‌ கோவில் கல்வெட்டில்எழுதப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பு ஏற்படவே அந்த கல்வெட்டை மூடிமறைத்து விட்டனர்.

Advertisment

s

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியில் இருக்கும் குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில்உள்ளது. அதன் அருகே அன்னபூரணி கோவில் கட்டபட்டு அதற்கு ராஜகோபுரம் எழுப்ப பட்டதின் பேரில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அந்த கும்பாபிஷேகத்திற்கு பேரூதவி புரிந்தவர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், ஓ.பி.பிரதீப்குமார் என கல்வெட்டில் எழுதி வைக்க பட்டு இருந்தது. இந்த விஷயம் கும்பாபிஷேகம் வந்த பொதுமக்களுக்கு தெரிய அதை படம் எடுத்து வாட்சப், பேஸ்புக்கில் போட்டதின் பேரில் அது காட்டு தீ போல் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை கண்டு அன்னபூரணி கோவில் நிர்வாகியும் அதிமுக விசுவாசியுமான ராமையாவின் மகனான முன்னாள் போலீஸ்காரரான வேல்முருகன் உடனே அந்த கல்வெட்டை மறைத்து வேறு ஒரு கல்வெட்டை வைத்தார்.

Advertisment

s

இந்த நிலையில்தான் இச்செயல் கண்டிக்கத்தக்கது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இது போன்ற செயல்களிவ் ஈடு படுவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரவீந்திரநாத் அதிரடியாக அறிக்கை விட்டார். அதை தொடர்ந்து ரவீந்திரநாத் குமாரின் மாமாவான சந்திரசேகரும் சில ர.ரக்களுடன் எஸ்.பி.பாஸ்கரனை சந்தித்து கல்வெட்டு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் முன்னாள் போலீஸ்காரர் வேல்முருகனை காக்கிகள் கைது செய்தனர். இந்த வேல்முருகன் யார்? என்றால் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி.

s

ஜெ. உடல் நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவ மனையில் இருந்த போது யூனிபார்முடன் மொட்டை போட்டார். அதன் மூலம் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்டாய ஓய்வு பெற்றார். விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தான் அன்னபூரணி கோவில் கட்டுவதற்கு ஓபிஎஸ்சிடம் வேல்முருகன் ஒரு கணிசமான தொகையை கோவிலுக்கு நன்கொடையாக வாங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்குமாரும் தேனி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்ற அடிப்படையில் தான் வேல்முருகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று கல் வெட்டு வைத்து இருக்கிறார். அது இந்த அளவுக்கு அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்து விட்டது கைது நடவடிக்கை வரை போய் விட்டது

.

ops Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe