ADVERTISEMENT

முல்லைப்பெரியாறு அணையில்  ஐவர் குழு  ஆய்வு!

12:12 PM Apr 30, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான குமுளி தேக்கடியில் கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த முல்லை பெரியார் தண்ணீர்தான் தென் தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீர் வாழ்வாதாரத்திற்கும், விவசாயத்திற்கும் பெரிதும் பயன் பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இப்படி தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் மாதந்திர பராமரிப்பு பணிக்காக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான (ஐவர் குழு) துணை கண்காணிப்பு குழு தேக்கடி வந்து அங்கிருந்து படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வின்போது அணையின் மெயின் பகுதி மற்றும் பேபி அணையையும் ஆய்வு செய்தனர். அது போல் அணையில் உள்ள ஷட்டர் பகுதிகள் மற்றும் கேலரியில் ஏற்பட்டு வரும் வழக்கமான நீர் கசிவு போன்ற பகுதிகளையும் இந்த துணை கண்காணிப்புகுழு பொருமையாக ஆய்வு செய்ததில் வழக்கம் போல் அணைபலமாக இருப்பதையும் தெரிந்து கொண்டனர். அதன்பின் இந்த இந்த துணை கண்காணிப்பு குழு தங்களின் ஆய்வு அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT