/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3758.jpg)
அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் மண்டாலா பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டாலாவுக்கு மேற்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ஹெலிகாப்டர் 16ம் தேதி காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது. அருணாச்சலப்பிரதேசத்தின் மண்டாலா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இரண்டு இராணுவ வீரர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இதில் தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான ஜெயமங்கலம் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கதமிழ்செல்வன், தேனி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேஜர் ஜெயந்த் உடல் இன்று ஜெயமங்கலத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)