தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொட்டிச்சி அம்மன் கோவில் தெருவில் கோபி என்பவர் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் பயன்படுத்தப்படும்நாட்டுவெடி தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் அவர் மறைந்து விட்டார். அதையடுத்து அவருடைய மகள் மற்றும் மனைவி இந்த தொழிலை செய்து வந்தனர்.

theni district incident police investigation

Advertisment

இந்நிலையில் நேற்று (11/03/2020) வழக்கம்போல் நாட்டுவெடி தயாரித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக வெடி வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 45 வயதான பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அவருடைய 18 வயதுள்ள நிவேதா என்ற மகள் பலத்த தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்புத் துறைனயிரும், பெரியகுளம் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.