Advertisment

தேனியில் ஒரே நாளில் 115  பேருக்கு தொற்று! 2,000-ஐ நெருங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

தேனி

Advertisment

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 115 பேருக்குக் கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பதற்குமுன்பாக தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் குறைவான அளவிலேயே கரோனாதொற்று இருந்தது. பொதுப் போக்குவரத்துத் தொடங்கி தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் மின்னல் வேகத்தில் தொற்று பரவத்தொடங்கியது.

மூன்று மாதங்களில் 100 க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்தே தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

சின்னமனூர் 32; கம்பம் - 25;தேனி - 13; பெரியகுளம் - 14;உத்தமபாளையம் - 10;

கூடலூர் - 8; வீரபாண்டி - 2; போடி -5;சில்ல மரத்துப்பட்டி - 5;

காமயகவுண்டன்பட்டி,கருநாகம் முத்தம்பட்டி,புதுப்பட்டி - 2;

லோயர்கேம்ப், அரண்மனைப்புதூர், பழனிசெட்டிபட்டி, தப்புக்குண்டு, கல்லுப்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி, நாராயண தேவன்பட்டி,கல்லுப்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் பூசாரிகவுண்டன்பட்டி, கோபலபுரம், ராயப்பன்பட்டி, ஆனை மலையன்பட்டி, கோம்பைபட்டி, ஓடப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவர் மருத்துவப் பணியாளர்கள் உள்பட 115 பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது.

இதில் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பெண் மருத்துவர், மருந்தாளுநர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர், கூடலூர் தெற்குக் காவல்துறையைச் சேர்ந்தவர்,வடக்குக் காவல் நிலையத்தில் பணியாற்றும் கம்பத்தைச் சேர்ந்த காவலர், தேனி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர்ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தேனி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,863 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 23 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இப்படி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரோனா தொற்றுதொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டு தேனி மாவட்ட மக்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

corona virus Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe