Advertisment

இ.பி.எஸ். உருவ பொம்மையை எரித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

theni district admk party leaders opanneerselvam supporters

அ.தி.மு.க.பொதுக்குழுகூட்டம் இன்று (23/06/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரெனகூட்டத்தில் இருந்துபாதியிலேயே கிளம்பிச் சென்று விட்டார். அவர் செல்லும் போது எடப்பாடி ஆதரவாளர்கள் சிலர் தண்ணீர் பாட்டிலையும் தூக்கி வீசினார்கள். அதுமட்டுமல்லாமல், அவருடையவாகனத்தைப்பஞ்சர் ஆக்கிய சிலர், அவரைத் தாக்க முயன்றதாககூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியதுடன் மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், ஓ.பி.எஸ்சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம்,போடி, தேனி ஆகிய பகுதிகளில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியைக்கண்டித்துக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல்கடமலைக்குண்டு,உத்தமபாளையத்தில்உள்ள ஓ.பி.எஸ்ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியைக்கண்டித்துக்கண்டன குரல் எழுப்பியதுடன் மட்டுமல்லாமல், அவருடைய உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இப்படி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், எடப்பாடிக்குஎதிராகக்கண்டன குரல் கொடுத்து வருவது தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

admk Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe