Advertisment

சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

theni distrct, sothuparai reservoir opening cm palanisamy order

சோத்துப்பாறை அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பான முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக்கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல்போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26/10/2020 முதல் 15/03/2021 வரை, முதல் 51 நாட்களுக்கு விநாடிக்கு 30 கனஅடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

Advertisment

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்திசெய்யப்படும். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகபயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cm palanisamy sothuparai dam THENI DISTRICT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe