Advertisment

வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

theni cumbum forest incident police investigation started

வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் குள்ளப்பன்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வனத்துறையினருக்கும் வனப்பகுதிக்கு வேட்டையாட வந்ததாகக் கூறப்படும் ஈஸ்வரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் ஈஸ்வரன் அரிவாளால் வனத்துறையினரைத்தாக்க முயன்றுள்ளார். அப்போது வனவர் திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவில் தோட்டத்திற்குச் சென்றவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்.

hospital police Cumbum Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe