இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை இயக்குநரகத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "பொதுமக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். 60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது கரோனா அறிகுறி இல்லை" என்றார்.