ADVERTISEMENT

தேனாம்பேட்டை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்... 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!!

06:36 PM Mar 05, 2020 | kalaimohan

கடந்த 3 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்பொழுது இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் தேதி தேனாம்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு நபர்கள் திடீரென அருகிலிருந்த கார் ஷோரூமின் மீது வீசிய பெட்ரோல் குண்டு வெடித்து ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

ADVERTISEMENT


இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக பெட்ரோல் குண்டு போடப்பட்டது என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்ராஜ் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் அங்கு உடனடியாக வந்த தடயவியல் நிபுணர் ஷோபா ஜோசப் ஆய்வு செய்தார்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் காதல் தோலிவியால் காதலி மீது விசிய பெட்ரோல் குண்டு தவறி போலீஸ்டேசன் பூத் மீது விழுந்து சேதம் அடைந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது சுமருதீன், ராஜசேகர், பிரசாந்த், ஜான்சன் ஆகிய நான்கு பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT