Advertisment

அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்; போலீசார் தீவிர விசாரணை! 

Theft at Vellore Bakery

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கே.மோட்டூர் பகுதியில் பெருமாள் என்பவர்பேக்கரி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் தனித்தனியாக மளிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று வழக்கம் போல இரவு கடையை மூடிவிட்டுவீட்டுக்குச் சென்று இன்று காலை கடையைத்திறக்க வந்தபோது, பெருமாள் என்பவரின் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த பணம் மற்றும் பேக்கரி தின்பண்டங்கள் திருடு போனது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் உள்ள லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவர்களின் மளிகை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பூட்டைஉடைக்க முயற்சி செய்துள்ளனர்

Advertisment

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் மளிகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்து அதில் உள்ள இரண்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் திருட முயற்சி செய்ததும்பேக்கரி கடையில் தின்பண்டங்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Theft police bakery Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe