நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் சென்றவரிடம் இருந்து லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் கன்னியாஸ்திரி ஒருவர் பயணித்த நிலையில் அவர் லேப்டாப் வைத்திருந்த பை திருடப்பட்டது. உடனடியாக அவர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி ரயிலில் ஏறி அமர்ந்திருந்த பொழுது அவருடையநண்பர்வந்ததால் லேப்டாப் வைத்திருந்த பையை சீட்டிலேயே வைத்துவிட்டு நண்பரிடம் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தார். இதை அறிந்துகொண்ட கிருஷ்ணமணி என்ற நபர் லேப்டாப் இருந்த பையை திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து கிருஷ்ணமணியை போலீசார் கைது செய்துள்ளனர். வந்தே பாரத் ரயிலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.