Advertisment

போதை நபரின் இரு சக்கர வாகனம் அபேஸ்; வைரலாகும்  சிசிடிவி காட்சி 

Theft of a two-wheeler from an intoxicated person; Police investigate with CCTV footage

Advertisment

மித மிஞ்சிய மதுபோதையில் இருசக்கர வாகனத்தின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை கீழே தள்ளி விட்டுவிட்டு இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தச்சம்பவத்தின் பின்னணியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் ஒருவர், தான் போதையில் இருந்த நேரத்தில் தன்னுடையபைக் திருடப்பட்டதாகபுகார் அளித்திருந்தார். கோதைமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில்தன் இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து பெட்ரோல் டேங்கின் மீது தலைவைத்தபடி படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த இளைஞர் ஒருவர், போதையில் இருப்பதை உணர்ந்து அவரை இருசக்கர வாகனத்தோடு கீழே தள்ளிவிட்டார்.

கீழே தள்ளிவிட்டதைக் கூட சுதாரிக்க முடியாத அளவிற்கு போதையில் அந்த நபர் இருப்பதை உணர்ந்தஇளைஞர், பின்னர் லாவகமாக இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் அடிப்படையில் போதை ஆசாமியிடமிருந்து பைக்கை திருடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

police TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe