Advertisment

வீட்டுக் கதவை உடைத்து திருட்டு! 

Theft at trichy police investigation

திருச்சி மாவட்டம், தொட்டியம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60). இவரும், இவருடைய மனைவி இருவரும் கூலி வேலை செய்துவருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு நேற்று காலை 8.30 மணியளவில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து காலை 11 மணியளவில் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பெட்டியில் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க மோதிரம், பணம் 4 ஆயிரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தொட்டியம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe