திருச்சி மாவட்டம், துறையூர் சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி. இவர், நேற்றிரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தன்னுடைய அவரது உறவினர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். மீண்டும் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உப்பிலியபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில், புஷ்பராணி வீட்டில் இருந்து 13 கிராம் தங்க நகை மற்றும் 100 கிராம் எடையுள்ள வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை மாயமானது தெரியவந்துள்ளது.