Advertisment

நிருபர் கழுத்தில் கத்தியை வைத்து மர்ம கும்பல் கைவரிசை..!

theft at trichy district musiri

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் நேற்று (21.06.2021) இரவு நிருபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து அவர்களிடமிருந்த உடைமைகளைப் பறித்து ஒரு மர்ம கும்பல் தன்னுடைய கைவரிசையைக் காட்டியுள்ளது.

Advertisment

இருவேறு தனியார் பத்திரிகைகளில் பணிபுரியும் நிருபர் விஜயன், நிருபர் வேல்முருகன் ஆகிய இருவரும் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தா.பேட்டைக்குடூவலரில் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தும்பலம் காட்டுப் பகுதியை நெருங்கியபோது இரண்டு டூவிலர்களில் வந்த 4 மர்ம நபர்கள் அவர்கள் மீது மோதி கீழே விழவைத்தனர்.

Advertisment

இதில் நிருபர் வேல்முருகன் கீழே விழுந்து காட்டு பகுதியில் ஓடியுள்ளார். நிருபர் விஜயன் மட்டும் அந்தக் கும்பலிடம் சிக்கியதால், அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம், செல்ஃபோன், டூவீலர் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நிருபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தப்பிச் சென்ற மர்ம கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

trichy Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe