Advertisment

Robbery in Tasmac shop Police searching  for mysterious people!

மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் டாஸ்மாக் கடையில் புகுந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 250 மதுபாட்டில்களைத்திருடிச் செல்லும் சி.சி.டி.வி. வீடியோகாட்சி வெளியாகியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, முத்துப்பேட்டை சாலையில் கீழப்பாலம் என்கிற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரவு பணி முடிந்ததும் 3 பேரும் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் முன்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை உடைத்துவிட்டு கடையின் பூட்டை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 250 மதுபாட்டில்களைத்திருடிச் சென்றனர்.

இது பற்றி கடையின் மேற்பார்வையாளர் மன்னார்குடி காவல்நிலையத்தில்புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேஸ்கண்ணன்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டாஸ்மாக் கடையில் திருடிய மர்ம நபர்களைத்தேடி வருகிறார்.இதற்கிடையில், இருசக்கர வாகனத்தில் 4 பேர் வந்து டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை தூக்கி மதுபாட்டில்களைத்திருடிச் செல்லும் சம்பவம் மற்றொரு சி.சி.டி.வி. வீடியோவில் பதிவாகி இருக்கிறது.