Advertisment

ஸ்ரீரங்கம் கோயிலில் திருட்டு…

Theft at Srirangam temple

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிளி மண்டபம் அருகில் உள்ள அலுவலகத்தில், பாஷ்யம் (57) என்பவர் அன்னதான டிக்கெட் விற்பனையாளராகப் பணியாற்றிவருகிறார். டிக்கெட் விற்பனையில் வசூலான தொகை 7,250 ரூபாயை அலுவலக பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, மதிய உணவுக்கு அவர் வெளியில் சென்றுள்ளார்.

Advertisment

திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்ட பணத்தைக் காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்போலீசார் நடத்திய விசாரணையில், CCTV கேமிரா பதிவு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பீரோவில் அவர் பணம் வைக்கும்போது, அதனை நோட்டமிட்டுப் பார்த்த திருவானைக்காவல் நெல்சன் சாலையைச் சேர்ந்த ராஜ்குமார் (21) என்பவர், இந்தத் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

Srirangam temple Theft trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe