v

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடினாலும் மணல் திருட்டு படுஜோராக நடைபெறுகிறது கடலூர் மாவட்டத்தில் மணல்கொள்ளையை தடுக்கும் விதமாக சிதம்பரம் காவல் கோட்ட துணைகண்காணிப்பாளர் பண்டியன் மற்றும் சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் சிதம்பரம் கண்ணங்குடி புறவழிச்சாலையில் அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 15 லாரிகளை பிடித்து விசாரணை நடத்தினர் லாரிகள் அனைத்தும் திருவாருரிலிருந்து விழுப்புறத்திற்கு ஆற்று மணலை எந்த வித ஆவணம் இல்லாமல் கடத்தி செல்வது தெரிய வந்தது.

Advertisment

அதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய சாத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (34),கன்னியாகுமரி சேர்ந்த பெல்ஜியம்(25),பண்ருட்டியை சேர்ந்த ராஜசேகர்(23),ராசிபுரத்தை சேர்ந்த கண்ணன்(30), அகரநல்லூர் சேர்ந்த கண்ணதாசன்(27),விழுப்புரம் திருவெங்கடம்(38) உள்பட15 பேரையும் கைது செய்து லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

Advertisment