Advertisment

வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் திருட்டு! 

vTheft in Revenue official home

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வருவாய்த்துறை அதிகாரியான இவர், கடந்த 4ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார். பின் நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த தங்க நகை உள்பட 10 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisment

Theft trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe