Advertisment

லாரியை மறித்து வழிப்பறி

Theft lorry driver complaint in police

Advertisment

திருச்சி மாவட்டம், தொட்டியம் எம்.புதூர் சத்திரம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள்(52). இவர், நேற்று காலை 5 மணியளவில் லாரியில் கரும்புலோடுடன் கரூர் புகழுர் பேப்பர் மில்லுக்கு சென்று கொண்டிருந்தபோது, திருச்சி-சேலம் சாலையில் லாரியை வழிமறித்த மர்ம நபா்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் பணம் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பெருமாள், தொட்டியம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த தொட்டியம் ராஜீவ்நகர் பகுதியைச் சோ்ந்த தினேஷ், பிரபு, மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும்காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவா்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe