கோவையில் கடந்த 4-ம் தேதி கோனியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி பெரும் விமரிசையாக நடந்தது. ஏராளமானவர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது தேரோட்டத்திற்கு வந்து சென்ற 10 க்கும் மேற்பட்ட பெண்களின் 35 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
கூட்டத்தில் நகைகள் மாயமானது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் கோவை உக்கடம் மற்றும் பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
தேரோட்டம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது அதில் 3 பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததை தொடர்ந்து அவர்கள் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்களின் பெயர் திருச்சூரை சேர்ந்த இந்துமதி,லண்டனை சேர்ந்த செல்வி, இலங்கையைச் சேர்ந்த பராசக்தி என்பதும் மூவரும் அக்கா தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் மூவரும் திருவிழா நடக்கும் பகுதிகளில் பக்தர்கள் போல ஒன்றுகூடி திருடிவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு சென்று விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இப்போது 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடல் கடந்து வந்து தங்க நகைகளை திருடும் அக்கா, தங்கைகளைப் பார்த்து அதிசயித்து நிற்கிறார்கள் கோவை போலீசார் மூவரையும் கைது செய்து சிறையலடைத்தனர்.