
திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் வசித்துவரும் ஆர்.எஸ்.எஸ். மாநிலச் செயலாளர் சுப்ரமணியன், கடந்த 4ஆம் தேதி தன்னுடைய மகளை சென்னையில் விடுவதற்காக குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். முத்தரசநல்லூரில் உள்ள சகோதரர் ஸ்ரீதரிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், 6ஆம் தேதி காலை வீட்டைப் பார்ப்பதற்காக ஸ்ரீதர் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 19 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த 4,350 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.